MAIL OF ISLAM

Knowledge & Wisdom




இமாம்கள் என்றால் யார்?

பொதுவாக இமாம் என்னும் வார்த்தைக்கு தலைவர் என்று பொருள். இஸ்லாமிய வரலாற்றிலே பல்வேறு இஸ்லாமிய கல்வி துறை சார்ந்த நிபுணர்களுக்கு, அறிஞர்களுக்கு இமாம்கள் என்று சொல்லப்படுகிறது.




இமாம்களின் துறைகள்:


1. இஸ்லாமிய சட்ட நிபுணர்களான மத்ஹபுகளைடைய இமாம்கள்


2. ஹதீஸ்களை தொகுத்த ஹதீஸ் தொகுப்பாளர்களான இமாம்கள்


3. ஹதீஸ்களின் தரங்களை ஆய்வு செய்யும் ஹதீஸ் கலை  வல்லுனர்கள்


4. இஸ்லாமிய கொள்கை விளக்க நிபுணர்களான அகீதாவுடைய இமாம்கள்


5. இஸ்லாமிய ஆன்மீக சூபிச கலைகள் பற்றி எழுதிய ஆன்மீக அறிஞர்கள்


6. அல்குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய தப்ஸீர் உடைய இமாம்கள்


6. இஸ்லாமிய வரலாறுகளை தொகுத்த வரலாற்று ஆசிரியர்கள்


7. மேற்சொன்னவை தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய கல்வி மற்றும் அறிவுத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள்.


இவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் பொதுவாக இமாம்கள் என கௌரவமாக அழைக்கின்றனர்.



இந்த இமாம்கள் அனைவரும் இஸ்லாமிய நேர்வழி கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து மரணித்தவர்கள்.


இந்த கொள்கைக்கு மாற்றமான வழிகெட்ட கொள்கையில் வந்தவர்களை முஸ்லிம்கள் இமாம்கள் என்று ஏற்பதில்லை. அந்தந்த வழிகெட்ட கூட்டத்தினரே அவர்களை இமாம்கள் என தமக்கு தாமே புகழ்ந்து கொள்ளுவார்கள்.